2 விமானங்கள் மோதி பயங்கர தீ விபத்து..! கடலோர காவல் படையை சேர்ந்த 5 பேர் பலி...!!

செவ்வாய், 2 ஜனவரி 2024 (17:58 IST)
ஜப்பானில் இரண்டு விமானங்கள் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் கடலோர காவல் படையை சேர்ந்த 5 பேர் பலியானர்கள்.
 
ஜப்பானில் உள்ள டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் 367 பயணிகளை ஏற்றிச் சென்ற ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியது. இதில் ஒரு விமானத்தில் தீ பிடித்தது. இதை அடுத்து விமானத்தில் இருந்த 379 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
 
சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில்
கடலோர காவல் படை சேர்ந்த ஐந்து பேர் பலியானர்கள். கடலோர காவல் படையை சேர்ந்த கேப்டன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். விமான விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்