இணையதளம் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள் வைத்த மதுவிருந்து: 250 பேர் கைது

வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (08:01 IST)
மதுவிருந்து வைத்த 250 பேர் கைது
இணையதளம் மூலம் தற்போது நண்பர்கள் வட்டாரங்கள் பெருகி வருவதும் அந்த நண்பர்கள் வட்டாரங்கள் அவ்வப்போது நேரில் சந்தித்து தங்கள் நட்பை விரிவுபடுத்தி வருவதும் தெரிந்ததே. குறிப்பாக பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நட்பாக இருப்பவர்கள் அவ்வப்போது சந்தித்து தங்கள் கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்
 
இந்த நிலையில் கொடைக்கானல் குண்டுபட்டி என்ற பகுதியில் நேற்றிரவு இணையதளம் மூலம் ஒன்று சேர்ந்த சுமார் 250 பேர் மது விருந்து வைத்ததாகவும் இந்த மது விருந்தில் சுமார் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும் கிடைத்த செய்தி அறிந்ததும் போலீசார் உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று அவர்களை சுற்றி வளைத்து கைது செய்னர்.
 
இந்த மது விருந்தில் கலந்து கொண்ட 250 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் உட்பட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்கள் அனைவரும் எதற்காக கூடினார்கள்? என்ன பேசினார்கள்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்