சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவில்லா பெட்டியில் சென்ற பயணி ஒருவர், அதிக கூட்டம் இருந்ததால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதனால், வெடிகுண்டு இருப்பதாக மது போதையில் இருந்த ஒருவர் மிரட்டல் விடுத்து, பின்னர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சந்தேகத்துக்குரிய வகையில் இருந்த தண்டாயுதபாணி என்பவரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தினர். முதலில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய அவர், பின்னர் "முன்பதிவில்லா டிக்கெட் வாங்கி ரயிலில் ஏறினேன். ஆனால், ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. தூங்கவிடாமல் பயணிகள் தொந்தரவு செய்தனர். அதனால் எரிச்சல் அடைந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக போலீசாருக்கு போன் செய்தேன்," என்று கூறினார்.