நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவை தேர்தலுக்காக மதுரையை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். தேர்தலுக்குப் பிறகு அப்பணிகள் நடைபெறாது என்றும் அவருக்கு கூறினார்.
இந்தியா முழுவதும் போதை பொருள் புழக்கம் உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜக தமிழகம் மீது பழி போட வேண்டாம் என தெரிவித்தார். மேலும் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது என்றும் யாரும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.