கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி அல்ல.. வரலாறு தெரியாமல் உளருகிறார்கள் : முதல்வர் ஸ்டாலின்..!

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (12:46 IST)
கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்த காலத்திலும் இருந்ததில்லை என்றும் வரலாறு தெரியாமல் கச்சத்தீவு குறித்து உளருகிறார்கள் என்றும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 
மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை என்றும் அவர் தெரிவித்தார்.  கச்சத்தீவை திமுக அரசு தாரை வார்த்துவிட்டதாக வரலாறு தெரியாமல் உளறுகிறார்கள் என்றும் கலைஞரின் எதிர்ப்பை மீறி தான் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். 
 
கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க போடப்பட்டது ஒப்பந்த மட்டுமே என்றும் சட்டம் இல்லை என்றும் அவர் கூறினார். இலங்கைக்கு வழங்கப்பட்ட பிறகும் பிரதமர் இந்திராவை சந்தித்து கச்சத்தை மீட்க வேண்டும் என கலைஞர் வலியுறுத்தினார் என்றும் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக எந்த காலத்திலும் இருந்ததில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்