800 வகையான உணவுகளை தயாரிக்கும் இயந்திரம்..மதுரையில் ஒரு விநோதம்

Arun Prasath

வெள்ளி, 24 ஜனவரி 2020 (16:03 IST)
ஒரே நேரத்தில் 800 வகையான உணவை தயாரிக்கும் இயந்திரம் மதுரையில் ஒரு தனியார் உணவகத்தில் பயன்படுத்தப்பட்டு வருவது வினோதமாக பார்க்கப்படுகிறது.

மதுரையில் அமைந்துள்ள ரோபோ செஃப் என்ற தனியார் உணவகத்தில், ஒரே நேரத்தில் 1600 பேருக்கு 800 வகையான உணவுகளை தயாரிக்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் கலைஞர்களின் ஆலோசனைப்படி ஒவ்வொரு உணவுக்கும் ஏற்றார் போல, கணிணி தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் இந்த இயந்திரம் மூலம் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை சேமிக்க முடியும்” எனவும் கூறியுள்ளது குறிப்படத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்