மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: மரண தண்டனை, ஆயுள் தண்டனை பெற்றவர்கள் விடுதலை..!

Mahendran

வெள்ளி, 14 ஜூன் 2024 (11:17 IST)
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் ஏழு பேருக்கு தூக்கு தண்டனை, இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் அப்ரூவராக மாறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேர் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேர் என மொத்தம் ஒன்பது பேரும் விடுதலை செய்யப்படுவதாக இன்று வெளியாகியுள்ள தீர்ப்பில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ஒன்பது பேரும் வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்