ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போலீஸ் மீதான அச்சம் போய் விட்டதால், நாள்தோறும் 15 கொலை நடக்கிறது என்றும் தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இதற்கு, போலீசாரின் கைகள் கட்டப்பட்டதே காரணம் என தெரிவித்த அண்ணாமலை, காவல் நிலையத்தில் போலீசார் வேலை செய்வதில்லை என்று புகார் கூறினார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறியதற்கு பதில் அளித்த அண்ணாமலை, கர்நாடக அரசிடம் தி.மு.க. பணம் வாங்கிவிட்டதா என்பது எனது சந்தேகம் என்றும் இதுவரை கர்நாடகா காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தை கூட அவர்கள் விமர்சிக்கவில்லை என்றும் இதுவரை அறிக்கை விடவில்லை என்றும் கூறினார்.