காவிரி விவகாரம்.! கர்நாடகாவுக்கு தமிழக முதல்வர் கண்டனம்.! நாளை அனைத்து கட்சி கூட்டம்!

Senthil Velan

திங்கள், 15 ஜூலை 2024 (13:03 IST)
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க முடியாது என தெரிவித்த கர்நாடக அரசுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11:00 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறிய கர்நாடக முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை கர்நாடக அரசு மீறி உள்ளதாகவும், தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணியளவில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி விவகாரத்தில் அடுத்த கட்டமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

ALSO READ: ஆம்ஸ்ட்ராங் கொலையில் திமுகவினருக்கு தொடர்பு..! பகிர் கிளப்பிய எல்.முருகன்..!!

அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களிடம் ஆலோசித்து விட்டு,  சட்ட வல்லுநர்களின் கருத்துக்களை பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்