கரும்பூஞ்ஜை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு மட்டுமே கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் 7 பேர் சர்க்கரை வியாதி உள்ளவர்கள். கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 9 பேரும் நலமுடன் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும், கரும்பூஞ்ஜை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை. இது புதுவாக உருவான தொற்று பாதிப்பு அல்ல. கரும்பூஞ்ஜை பாதிப்பு கண்டு ஆராய குழு அமைக்கப் பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.