மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திணிக்க முயல்வதாக தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் கல்வி நிதி தர முடியாது என மத்திய கல்வி அமைச்சர் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த பலர் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய்யும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
விஜய்யின் கண்டனத்தை விமர்சித்து பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் “நான் தெலுங்கானா ஆளுநராக இருந்தபோது விஜய்யின் படங்கள் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. பல மொழிக்கொள்கை உங்கள் வியாபாரத்திற்கு இருக்கலாம், ஆனால் குழந்தைகளின் அறிவாற்றலுக்கு இருக்கக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் “தமிழில் மட்டும்தான் என் படம் ரிலீஸாகும் என்று நீங்கள் சொன்னீர்களா? நான் தமிழன்.. தமிழை போற்றுபவன், அதனால் தெலுங்கில் ரிலீஸ் செய்தால் நான் எதிர்ப்பேன் என நீங்கள் சொல்லவில்லையே..! இதில் எல்லாம் நீங்கள் கருத்து சொல்லாதீர்கள். நீங்கள் கருத்து சொன்னால் அது சரியாக இருக்காது” எனவும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K