நிலவேம்பு கசாயம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் விஜய பாஸ்கர்

செவ்வாய், 17 அக்டோபர் 2017 (15:28 IST)
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சல் காரணமாக அதிகளவிலான உயிரிழப்பும் நேர்ந்துள்ளது. டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நிலையில் அரசியல் கட்சிகளும், தனியார் சமூக அமைப்புகளும், நடிகர்களின் ரசிகர்களும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுத்து வருகின்றனர்.ஆனால் நிலவேம்பு கசாயம் குடித்தால் வேறு பாதிப்புகள் உண்டாகும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.





இந்த நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்த்து ஆறுதல் கூறினார்.அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது. 15 நாட்களில் காய்ச்சலின் தாக்கம் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். நிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்