திருவண்ணாமலை வந்தவாசியில் உள்ள தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. இவருக்கு முனியம்மாள், ருக்மணி என்று இரு மனைவிகள் உள்ளனர். சகோதரிகளான முனியம்மாள், ருக்மணிக்கு 3 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகள் முன்னாள் தெய்வசிகாமணி இறந்த நிலையில் முனியம்மாள் தனது மகன்களோடு சென்னை சென்றுவிட, ருக்மணி தனது மகன்களோடு தென்னாங்கூரிலேயே வாழ்ந்து வந்துள்ளார்.
ருக்மணியின் இளைய மகன் சுரேஷுக்கு 35 வயதாகிவிட்ட நிலையில் இன்னும் திருமணமாகவில்லை. தச்சர் வேலை செய்யும் சுரேஷ் இதனால் அடிக்கடி தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தொடர்ந்து தனது தாயிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் தனக்கு திருமணமாகாததால் விரக்தியடைந்த சுரேஷ் குடிக்கு அடிமையாகியுள்ளார். இதனால் தினம்தோறும் குடித்துவிட்டு வந்து தனது தாயிடமும் சண்டை போட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று சென்னையில் இருந்து முனியம்மாள் தனது தங்கை ருக்மினியை பார்க்க தென்னாங்கூர் வந்திருந்துள்ளார். அன்று சுரேஷ் குடித்துவிட்டு வந்து தனது தாய் ருக்மிணியிடமும், பெரியம்மாள் முனியம்மாளிடமும் சண்டை போட்டுள்ளார். இதனால் முனிய்ம்மாளும், ருக்மிணியும் சேர்த்து சுரேஷை கட்டையால் தாக்கியதில் மயங்கி ரத்த வெள்ளத்தில் சரிந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.