தீபாவளி முதல்நாள் விடுமுறை இல்லை - பசங்க கொண்டாட்டத்திற்கு ஆப்பு

Webdunia
வியாழன், 27 அக்டோபர் 2016 (11:20 IST)
தீபாவளி முதல் நாள் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்துள்ளது.
 

 
தீபாவளி பண்டிகை நாளை வருகின்ற சனிக்கிழமை (29ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. தீபாவளியை ஒட்டி அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளித்துள்ளது. எனவே, தீபாவளிக்கு முன்னதாகவே தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.
 
இதேபோல், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ - மாணவியர்கள் வெளியூர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடும் அவதியறும் நிலை ஏற்படும்.
 
இதனை கருதி ஆசிரியர் சங்கத்தினர், தீபாவளிக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.
 
ஆனால், இவர்களின் இந்த கோரிக்கைக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை பள்ளிகள் வழக்கம்போல செயல்பட வேண்டும் என தொடக்க கல்வி அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது சம்பந்தமாக பள்ளிகளுக்கு அறிக்கையாகவும், வாய்மொழி உத்தரவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேபோல், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளும் வழக்கம்போல் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை அக்டோபர் 29ஆம் தேதியன்று சனிக்கிழமை அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் கொண்டாட்டத்திற்கும் தடையாக அமைந்துவிட்டது.

 
அடுத்த கட்டுரையில்