7 ஆவது நாளாக பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள், தலைமை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். ஆனால் அரசு அந்த கோரிக்கைகள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதை தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தமிழக அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டெங்கு சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை தவிற மற்ற பிரிவுகள் அனைத்திலும் சேவை தடை செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து மருத்துவ சங்க பிரதிநிதிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. மேலும் போராட்டத்தை தற்போது தள்ளிவைத்துள்ளாதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு செல்லாத அரசு மருத்துவர்கள் மீது பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று சுகாதாரத்துறை எச்சரித்ததை அடுத்து, இன்று 7 ஆவது நாளாக பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு பிரேக் இன் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.