நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தம்: யாரும் வரவேண்டாம் என அறிவிப்பு!

Webdunia
திங்கள், 17 மே 2021 (07:34 IST)
சென்னை நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதாகவும் எனவே ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு யாரும் நேரு ஸ்டேடியத்தில் வரவேண்டாம் என்றும் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் நேரு ஸ்டேடியத்தில் வரிசையில் காத்திருந்தனர். இதனால் தனிமனித இடைவெளி இன்றி காத்திருக்கும் மக்களுக்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுபவருக்கு நேரடியாக தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் அனுப்பப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரு ஸ்டேடியத்தில் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அறிவிப்பு ஒன்றில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக நேரு ஸ்டேடியத்திற்கு யாரும் வரவேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவுப்படி தனியார் மருத்துவமனைகளில் நாளை முதல் நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்