ஏப்ரல் 18 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நடைபெறுகிறது .அப்பொழுது தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையை சேர்ந்த காவலர்களுக்கு அஞ்சல் வாக்கு சீட்டு வழங்கப்பட்டு இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி கரூர் மாவட்ட ஆட்சியரும் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் பார்வையிட்டனர்.
கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், கரூர் சட்டமன்றத் தொகுதிகளும் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குளித்தலை சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்கு உள்ள 549 போலீசார் 258 ஊர்க்காவலர் படையினர் என மொத்தம் 809 பேர் காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படை காவலர்கள் இன்று தொடங்கியுள்ள தபால் ஓட்டு அளிக்கும் மையத்தில் வாக்கு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வாக்காளர்கள் விபரம் அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் கொடுப்பதில்லை என்றும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உரிய விவரத்தை கூறியும் பேச்சுவார்த்தையிலும், கடும் ரகளையும் ஈடுபட்டதால் தபால் வாக்களிக்கும் இடத்தில் சில மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.