தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் தபால் வாக்கு அளிக்கும் நிகழ்வு

புதன், 10 ஏப்ரல் 2019 (20:03 IST)
நடைபெறவுள்ள  இந்தியாவின் 17 வது மக்களவைப் பொதுத் தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள  காவல்துறையினர்  தபால் மூலம்  தங்களது வாக்குகளை  அளிக்கும்  வகையில்  மாவட்ட  ஆயுதப்படை  அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த  தபால்  வாக்குப்பதிவு  சேவை  மையத்தினை கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன்  மற்றும் தேர்தல் பொதுபார்வையாளர்  பிரசாந்த்குமார்  ஆகியோர்  ஆய்வு செய்தார்கள். 
அப்போது, தங்களது தபால் வாக்குகளை பதிவு  செய்ய  வந்திருந்த காவலர்களிடம்  தேர்தல்  நடத்தும்  அலுவலர்  அன்பழகன்.,  தபால் வாக்குகளை அளிப்பதற்கு முன்பாக செய்ய வேண்டிய நடைமுறைகள் குறித்தும்.,  எவ்வாறு  படிவத்தை  பூர்த்தி  செய்து  அதை  முறையாக  மடித்து மேலுறையில்  வைத்து  ஒட்டி  அதன்  பின்னர்  மேலுறையில்  கையொப்பமிட்டு  அதன்  பிறகே பெட்டிக்குள்  போட  வேண்டும்  என்ற  விபரங்களை  தெளிவாக  தேர்தல்  பொது பார்வையாளர் பிரசாந்த் குமார்  முன்னிலையில் அனைவருக்கும் எடுத்துரைத்தார். 
 
அதன் பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் தபால் ஓட்டுகளை போடும் பெட்டி காலியாக இருப்பது காண்பிக்கப்பட்டு  பின்னர்  பூட்டி  சீல்  வைக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து தபால் வாக்குகளை  பதிவு  செய்யும்  நிகழ்வு  தொடர்ந்து  நடந்தது. 
 
இந்த  சேவை மையத்தில்  வாக்களிக்க  வரும்  காவலர்கள்  தங்களது  பெயர்  வாக்காளர் பட்டியலில்  எந்த  பாகத்தில்  எந்த  தொடர்  எண்ணில்  அமைந்துள்ளது  என்பது குறித்த  தகவல்களை  அவர்களுக்கு  வழங்கி  உதவும்  வகையில்  போதிய அளவிலான  சட்டமன்றத் தொகுதி  வாரியாக  கணினி  வசதியுடன் அலுவலர்கள்  நியமிக்கப்பட்டிருந்தனர்.  மேலும்.,  தபால்  வாக்களிக்கும் படிவத்தில்  கையொப்பமிட  சான்றளிக்கும்  அலுவலர்  ஒருவரும் பணியமர்த்தப்பட்டிருந்தார். காவல்துறையை  பொறுத்த வரை  பிற மாவட்டங்களைச்சேர்ந்த 549 நபர்களும் ஆக மொத்தம் 869 நபர்கள் தபால் வாக்குகளை அளிக்க விண்ணப்பங்களை பெற்றுள்ளனர்.  
 
ஊர்க்காவல் படையினரைப்  பொருத்தவரை  260  நபர்கள்  தபால்  வாக்குகளை  அளிக்க விண்ணப்பங்களை  பெற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்