உதயநிதிக்கு எவ்ளோ குடைச்சல் கொடுத்தீங்க... கெத்தா வெச்சி செஞ்ச வில்சன்!

சனி, 21 செப்டம்பர் 2019 (08:51 IST)
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கெத்து என்பது தமிழ் வார்த்தைதான் என கண்டுபிடித்துள்ள அதிமுக அரசுக்கு என் வாழ்த்துக்கள் வழக்கறிஞரும் எம்பியுமான வில்சன் தெரிவித்துள்ளார். 
 
ஆண்டுதோறும் நடைபெறும் தமிழ் இணைய மாநாடு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலந்துக்கொண்டார். 
 
அப்போது அவர், தமிழ் மாணவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ‘கெத்து’, ‘வெச்சி செய்வது’ போன்ற வார்த்தைகளை பொது வெளியில் பிரபலப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த வார்த்தைகள் எல்லாம் புதியவை அல்ல. ஏற்கனவே சிலப்பதிகாரம் போன்ற பழம்பெரும் காப்பியங்களில் அவை இடம்பெற்றுள்ளன என்று பேசினார். 
இந்நிலையில் இதற்கு வரவேற்பு தெரிவித்தும் அதே சமயத்தில் நசூக்காக குத்திக்காட்டியும் டிவிட்டரில் பதிவி ஒன்றை போட்டுள்ளார் திமுக மாநிலங்களவை எம்பி வில்சன். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கெத்து தமிழ் வார்த்தை இல்லை என உதயநிதி ஸ்டாலின் படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தர மறுத்த அதிமுக அரசு, 3 ஆண்டுகளுக்கு பிறக்கு கெத்து தமிழ் வார்த்தைதான் என கண்டுபிடித்துள்ளது. வாழ்த்துக்கள்!
 
ஆனால், நான் கெத்த தமிழ் வார்த்தைதான் என வாதாடி, 2016 ஆம் ஆண்டே உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துவிட்டது என பதிவிட்டுள்ளார். ஆம், 2016 ஆம் ஆண்டு உதயநிதி நடித்த கெத்து படத்திற்கு அது தமிழ் சொல் அல்ல என வரிவிலக்கு அளிக்க மறுத்தது அதிமுக அரசு. 
 
அப்போது படக்குழு சார்பில் வழக்கு தொடரப்பட்டு, வில்சன் வழக்கை வாதாடி கெத்து என்பது தமிழ் சொல்தான் என உறுதி செய்து வரிவிலக்கு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்