கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற இருந்த கூட்டம் திடீர் ஒத்திவைப்பு.. என்ன காரணம்?

ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (13:00 IST)
திமுக எம் பி கனிமொழி தலைமையில் திருச்சியில் நடைபெற இருந்த முக்கிய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 திமுக எம்பி கனிமொழி தலைமையில் திருச்சியில் திமுக மகளிர் அணி கூட்டம், திமுக மகளிர் தொண்டர் அணி கூட்டம், மகளிர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஆகியவை நடைபெற இருந்தது.
 
இந்த கூட்டம் நாளை மறுநாள் அதாவது செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற விட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென இந்த கூட்டம் எதிர்பாராத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
 
இந்த கூட்டத்திற்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என திமுக மகளிர் அணி தெரிவித்துள்ளது. கனிமொழி எம்பி தலைமையில் நடைபெறும் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் திமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்