ஆசிய போட்டியில் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி அபார வெற்றி.

ஞாயிறு, 24 செப்டம்பர் 2023 (10:47 IST)
சீனாவில் ஆசிய போட்டி தொடங்கி உள்ள நிலையில் இதில் இந்தியா மற்றும் வங்கதேச மகளிர் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. 
 
20 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் வங்கதேச மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்து  51  ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்த போட்டியில் கேப்டன் சுல்தானாவை தவிர மற்ற அனைத்து  வீராங்கனைகளும் சிங்கிள் டிஜிட்டல் ரன்கள் எடுத்தனர் என்பதும் இதில்  5 வீராதனைகள் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 52 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய மகளிர் அணி விளையாடிய நிலையில் வெறும் 8.2 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்