விஜய்யின் 'லியோ'பட இசை வெளியீடு விவகாரம்... தயாரிப்பு நிறுவனம் தகவல்

சனி, 23 செப்டம்பர் 2023 (20:56 IST)
நடிகர் விஜய்யின் 'லியோ' பட இசை வெளியீட்டு விழா பற்றிய வதந்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்  இவர் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா  உள்ளிட்டோர்  நடித்துள்ளனர்.

படத்தின் ஷூட்டிங் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் 30 ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடக்க உள்ளது.

இதற்கான அனுமதி பெற்றுவிட்டதாக லியோ பட தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.

அதில், நடிகர் விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்துவதற்கு ஏற்கனவே அனுமதி பெற்றுவிட்டதாகவும்,லியோ படத்தின் விநியோகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தலையீடு ஏதும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்