சாலையில் திடீர் விபத்து; டாக்டராக மாறிய திமுக எம்.எல்.ஏ! – விழுப்புரத்தில் பரபரப்பு!
வெள்ளி, 9 ஜூலை 2021 (12:38 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் சாலையில் விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு திமுக எம்.எல்.ஏ முதலுதவி செய்த சம்பவம் வைரலாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ராகவன்பேட்டை அருகே சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் இளைஞர் ஒருவர் காயம்பட்டார். காயம்பட்டு அவர் சாலையில் கிடந்த நிலையில் அந்த பக்கமாக சென்ற திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் உடனடியாக வாகனத்தை விட்டு இறங்கி இளைஞருக்கு முதலுதவி சிகிச்சைகள் செய்துள்ளார்.
பின்னர் ஆம்புலன்ஸில் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காயம்பட்ட இளைஞருக்கு உடனடியாக எம்.எல்.ஏ முதலுதவி அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.