வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம்!

வெள்ளி, 9 ஜூலை 2021 (10:51 IST)
வெப்பசலனம் காரணமாக தமிழகத்டில் மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் மத்திய மேற்கு – வட மேற்கு பகுதியில் எதிர்வரும் 11ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்