உக்ரைன் போரால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று தொடங்கும் இரண்டாம் சுற்று பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உக்ரைன் போர் விவகாரம், இந்தியர்கள் மீட்பு குறித்த விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நீட் மசோதாவை கிடப்பில் போட்டுள்ள ஆளுனரின் நடவடிக்கை, தொழிலாளர்களின் பிஎஃப் வட்டி குறைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக குழு தலைவர் டிஆர் பாலு கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார். திமுக உள்ளிட்ட மேலும் சில எதிர்கட்சிகளும் பிஎஃப் வட்டி விகித குறைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன என கூறப்படுகிறது.