சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீர் இல்லாததால் குருவி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் அரிசி உள்ளிட்ட விலைவாசிகளின் விலை அதிகரித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்த அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் இருந்தும் தமிழக அரசுக்கு மனமில்லை என்று விமர்சித்தார். சமூக நீதிப் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை என்று கடுமையாக சாடினார்.