உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு - எடப்பாடிக்கு செக் வைத்த திமுக

சனி, 13 அக்டோபர் 2018 (15:55 IST)
ஊழல் புகாரில் சிக்கியுள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்  முறையீடு செய்யவுள்ள நிலையில், திமுக தரப்பில் கேவியட மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 
நெடுஞ்சாலையில் துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது சம்பந்தி மற்றும் உறவினர்களுக்கு டெண்டர்களை கொடுத்து முறைகேடு செய்ததாகவும் திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
 
இது தொடர்பான விசாரணையில், லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மீது திருப்தி இல்லை என்று கூறிய நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என இன்று உத்தரவிட்டது.
 
இதைத் தொடர்ந்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எடப்பாடி பழனிச்சாமி தொடர்பான ஊழல் வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கும் முன் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்