திமுக வேட்பாளர்கள் தோல்விக்கு காரணமானவர்கள் பதவியை திமுக தலைமை பறித்து வருகிறது.
நடைபெற்று முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. திமுகவால் 98 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. பல தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்பபை நழுவவிட்டது. இதற்கு அந்த பகுதியில் உள்ள திமுக செயலாளர்கள் தான் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, திமுக தோல்விக்கான காரணம் குறித்து ஆராய ஒரு குழு அமைத்தது. இக்குழுவின் பரிந்துரைப்படி ஒன்றியச் செயலர்கள், மாவட்ட செயலர்கள் பலரது பதவியும் பறிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருவாரூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.சண்முகம், தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் என்.செல்வராஜ், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி ஒன்றியச் செயலாளர் என்.எஸ். சேகர், விழுப்புரம் தெற்கு மாவட்டம் திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆதி.சங்கர் ஆகியோர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.