மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக ஜெயிக்க வாய்ப்பில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், தற்போதைய தேர்தல் குறித்து கூறுகையில், “இந்த தேர்தல் குறித்து எந்த கருத்தும் இல்லை. நான் இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் வாக்களிக்கப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், தான் ஸ்டாலினைப் பார்த்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. குறைந்தப்பட்சம் இரண்டரை ஆண்டுகள் இருக்கும் என்றும் அதேபோல், தனது சகோதரி கனிமொழியிடம் பேசியும் மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மதுரையில் திமுக வெற்றி வாய்ப்பு குறித்து கூறுகையில், “மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக ஜெயிக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார். மேலும், திமுகவிற்கு தன்னை பயன்படுத்திக்கொள்ள தெரியவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.