திமுக தலைமையின் உத்தரவை மதிக்காத மாவட்டச் செயலாளர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாம்.
தமிழகம் முழுக்க திமுக நிர்வாக ரீதியாக செயல்பட 65 மாவட்டமாக பிரித்து 65 செயலாளர்களை நிமித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட செயலாரும், 2 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை கட்டாயம் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதுபோல் செய்தால், சுமார் 130 தொகுதிகளில் திமுக எளிதாக வெற்றிபெறும் என கணக்கு போட்டு திமுக காய்நகர்த்தியது.
ஆனால், திமுகவால் 89 இடங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால், தோல்வியை தழுவிய மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களை ராஜினாமா செய்ய தலைமை நெருக்கடி கொடுத்துவருவதாக கூறப்படுகிறது.
இந்த நெருக்கடிக்கு பயந்து, திருப்பூர் வடக்கு திமுக மாவட்ட செயலாளர் செல்வராஜ் தனது மாவட்டச் செயலாளர் பதவியை முதன்முதலில் ராஜினாமா செய்து பிள்ளையார்சுழி போட்டுள்ளார்.
இதேபோல ராஜினாமா லிஸ்டில், கரூர், நாகை, தேனி, மதுரை, நாமக்கல், கோவை, சேலம், ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், மாவட்ட செயலாளர்கள் இடம் பெற்றுள்ளார்களாம்.
எனவே, இந்த மாவட்டச் செயலாளர்கள் விரைவில் தானாகவே பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமாம், இல்லை எனில் அவர்களை சென்னைக்கு வரவழைத்து கட்டாய கையெழுத்து வாங்க திமுக தலைமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.