வெளியானது கருணாநிதியின் புகைப்படம்: முதுமையின் பிடியில் திமுக தலைவர்!

Webdunia
புதன், 24 மே 2017 (10:24 IST)
திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக கட்சி விவகாரங்களிலும், அரசியலிலும் அதிகமாக ஈடுபடாமல் ஓய்வில் இருந்து வருகிறார். ஊடகங்களில் அவரை பார்த்து நீண்ட நாட்கள் ஆன நிலையில்  ஒரு மாதத்திற்கு பின்னர் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.


 
 
திமுக தலைவர் கருணாநிதிக்கு வயது முதுமை காரணமாக உடல் நிலை சரியில்லாமல் போனது. இதனால் சில மாதங்களுக்கு முன்னர் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவர் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஓய்வெடுத்து வருகிறார்.
 
தொண்டர்கள் யாரும் அவரை சந்திக்க வர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் திமுக தலைவர் கருணாநிதி எப்படி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி அவரை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டார்.
 
இதனையடுத்து கருணாநிதி தனது சட்டசபை வைர விழாவில் கலந்துகொள்வார் என கூறப்பட்டது. ஆனால் உடல்நிலை காரணமாக அதிலும் அவர் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் கருணாநிதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. முதுமையின் காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் கருணாநிதி வீட்டிலேயே ஓய்வெடுத்து சிகிச்சை பெற்று வருகிறார்.
அடுத்த கட்டுரையில்