தேர்தல் சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக அனைத்து கட்சி கூட்டத்தை திமுக கூட்டியுள்ள நிலையில், இந்த கூட்டத்தை தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேர்தல் சீர்திருத்த சட்ட நடவடிக்கைக்கு எதிராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றி கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அக்கட்சி கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டத்தைக் கூட்டியிருந்தால் பங்கேற்றிருப்போம் என்றும், திமுக சார்பில் கூட்டம் நடைபெற உள்ளதால் பங்கேற்க முடியாது என்றும் அந்த கட்சியின் நிர்வாகிகள் விளக்கம் அளித்துள்ளனர்.