இரண்டாக உடைகிறதா தேமுதிக? பரபரப்பு தகவல்

செவ்வாய், 12 மார்ச் 2019 (20:27 IST)
ஒவ்வொரு தேர்தலின்போது திமுக, அதிமுக என இரண்டு கூட்டணியிலும் பேரம் பேசி எதில் அதிக தொகுதிகளும் மற்ற முக்கிய அம்சங்களும் கிடைக்கின்றதோ அதில் கூட்டணி வைக்கும் முக்கிய கொள்கையை கொண்டுள்ள தேமுதிக, இந்த முறையும் நீண்ட இழுபறிக்கு பின் அதிமுக கூட்டணியில் இணைந்தது. அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தேமுதிகவின் சந்தர்ப்பவாத, கொள்கையில்லாத, அருவருப்பான அரசியலை கண்டு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கொதிப்படைந்துள்ளனர். தேமுதிக நிர்வாகி என்று வெளியே சொல்வதற்கே வெட்கமாக இருப்பதாக பலர் தங்களுடைய மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்
 
விஜயகாந்த் கஷ்டப்பட்டு கட்டிக்காத்த கட்டுக்கோப்பான கட்சியை பிரேமலதாவும், சுதீஷும் தங்கள் சுயநலத்திற்கு பயன்படுத்தி வருவதாக தேமுதிகவின் முன்னணி நிர்வாகிகள் தற்போது வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இந்த நிலையில் தே .மு.தி.க. இரண்டாக உடையப் போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
 
ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது கட்சியின் சில முக்கிய நிர்வாகிகள் விலகி திமுகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இப்போதும் சில நிர்வாகிகள் திமுக இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்