இது குறித்து, தேமுதிக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் மே மாதம் 16 ஆம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள ஒரு சில பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் தேர்தல் கணிப்பு என்ற பெயரில் மக்களுக்கு தவறான தகவலை கொடுத்து வருகின்றனர். மக்களை திசை திருப்புகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும்.