சொத்து வரி உயர்வை கண்டித்து தேமுதிக போராட்டம்!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (14:31 IST)
சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11 ஆம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது என அறிவிப்பு. 

 
தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரிகளை உயர்த்தியது. இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில் இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அமமுகவும் கண்டன கூட்டங்கள் நடத்தவிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளதாவது, 
 
பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் பிரசினையை உணராமல் அரசாங்கம் மக்களின் வரியில் அரசாங்கத்தை நடத்த முயற்சிக்கின்றனர். விலைவாசியை திரும்பப் பெறவேண்டும்.
 
சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 11 ஆம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பாக போராட்டம் நடைபெற உள்ளது. 25% முதல் 50% வரை உயர்த்தலாம். ஆனால் 150% என்பது ஒட்டுமொத்த மக்களும் தாங்க முடியாத சுமை ஏற்கனவே பல பிரச்சினைகள் உள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வை நிச்சயமாக அரசு மறுபரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்