தமிழச்சி என்பதால் உள்ளே விடவில்லை - கொந்தளித்த டிடி

சனி, 15 ஏப்ரல் 2017 (12:39 IST)
தமிழச்சி என்பதால் தனக்கு ஏற்பட்ட கசப்பான ஒரு அனுபவத்தை சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.


 

 
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியதாவது:
 
நான் ஒரு தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்றேன். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால், வெயிலில் எனது உடல் சிவந்து விட்டது. எனவே அங்கிருந்த காவலாளி என்னை வெளிநாட்டினர் என நினைத்து எனது பாஸ்போர்டை கேட்டார். 
 
எனக்கெதற்கு பாஸ்போர்ட். நுழைவு சீட்டு வாங்கியிருக்கிறேன். அது போதுமே எனக் கேட்டேன். நான் ஒரு இந்தியன் எனக் கூறினேன். அதன் பின்னும் என்னை உள்ளே விட மறுத்த அந்த காவலாளி நீங்கள் ரூ.2500 கட்டி விட்டு வாருங்கள் என்றார்.  தொடர்ந்து ஹிந்தியிலேயே பேசிக் கொண்டிருந்தார். நான் ஆங்கிலத்தில் பேசினேன். அது அவருக்கு புரியவில்லை. எனக்கு ஹிந்தி தெரியாது எனக் கூறினேன். ஹிந்தி தெரியாது, பின் எப்படி இந்தியன் என என்னிடம் கேட்டார். உனக்கு எப்படி தமிழ் தெரியாதோ அதுபோல் எனக்கு ஹிந்தி தெரியாது என அவரிடம் சண்டை போட்டேன். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவள் எனக் கூறினேன். அதன் பின் சிறிது நேரம் கழித்து என்னை உள்ளே செல்ல அவர் அனுமதித்தார்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்