எம்.எல்.ஏக்களின் பதவியை காலி செய்வதுதான் தினகரனின் நோக்கம் - திவாகரன் பேட்டி

Webdunia
வெள்ளி, 15 ஜூன் 2018 (16:51 IST)
18 எம்.எல்.ஏக்களின் பதவி பறி போக வேண்டும் என்பதுதான் தினகரனின் நோக்கம் என சசிகலாவின் சகோதரர் பேட்டியளித்துள்ளார்.

 
பெரிது எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.    இதனால், 3வதாக ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திவாகரன் “18 எம்.எல்.ஏக்களின் பதவி பறி போக வேண்டும் என்பதுதான் தினகரன் நோக்கம். ஆனால் தீர்ப்பு வேறு மாதிரி வந்து விட்டது. இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடி. 3வது நீதிபதியின் தீர்ப்பு வெளியான பின் இந்த வழக்கு முடிவிற்கு வரும்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்