செப். 1 முதல் பள்ளிகளை திறக்க ஆலோசனை!

செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (11:02 IST)
தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை. 

 
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளை திறக்க மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டு வழிமுறைகள் குறித்து கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார்.
 
இதனிடையே தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். சென்னையில் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனையில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்