ஆர்கே இடைத்தேர்தலில் அபார வெற்றி பெற்ற டிடிவி தினகரன் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெற்றதின் மூலம் எம்எல்ஏவாக உள்ள டிடிவி தினகரன் தேர்தல் வெற்றிக்கு பின்னர் சசிகலாவை சந்திக்க செல்லவில்லை. காரணம் சசிகலாவை தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் சந்திக்க சிறைத்துறை அனுமதிக்கிறது.
இதனையடுத்து தினகரன் வரும் 29-ஆம் தேதி பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தினகரன் சட்டசபையில் எப்படி செயலாற்ற வேண்டும், எடப்பாடி, ஓபிஎஸ் அணியினரை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என ஆலோசனை நடத்தலாம்.
வரும் 29-ஆம் தேதி தினகரன் எம்எல்ஏவாக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெங்களூர் சிறை தரப்பு சிறப்பு அனுமதி அளித்தலாம் இன்றே தினகரன் சசிகலாவை சந்திக்கலாம் எனவும், ஆனால் இதுவரை அப்படி அனுமதி கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.