தினகரன் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை?: சிறைக்கு செல்வார் என ஆரூடம்!

வெள்ளி, 24 மார்ச் 2017 (11:59 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணியை சேர்ந்த தினகரனுக்கு அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் இது.


 
 
இதனையடுத்து அனைத்து  கட்சிகளும் தினகரனுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் மும்மரமாக உள்ளது. இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் கூறுகையில் தினகரன் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை வரும் என தெரிவித்தார்.
 
காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று ஈரோட்டில் நடைபெற உள்ளது. இதனை ஆய்வு செய்ய வந்த இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது பேசிய அவர், இரட்டை இலை சின்னத்தை முடக்கியது எதிர்பார்த்தது தான். ஆனால் ஆர்கேநகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் அதிமுகவை மக்களே முடக்கி விடுவார்கள். இந்த தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றாலும் அவர் சட்டசபைக்கு போக முடியாது. அன்னிய செலாவணி வழக்கில் சிறைக்குத்தான் செல்வார். சசிகலாவை போல் தினகரனும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிச்சயம் வரும் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்