தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. இந்த விசாரணைக்கு காரணம் தினகரன் மதுரை மாவட்டம் மேலூர் பொதுக்கூட்டத்தில் கூடிய கூட்டமும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்ததாக கூறியதும் தான் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனை செய்தியாளர்கள் கேள்வியாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், பொதுமக்களின் நியாயமான கோரிக்கை காரணமாகத்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. தலைக்கு 500 ரூபாய் கொடுத்து யார் வேண்டுமானாலும் கூட்டம் கூட்டலாம்.