ஜெயலலிதா உடல்நிலை குறித்து அவர் அக்கறை கொண்டதே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி ஆதங்கம்!

வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (09:15 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் பலனளிக்காமல் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார்.


 
 
அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு மர்மம் நிறைந்த ஒரு மரணமாக அவரது மரணம் உள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
 
இந்நிலையில் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்று ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது இருந்த அவரது மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் அவரது சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவை அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது.
 
இது மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில், ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஒரு போதும் அக்கறை கொண்டதில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் சிறையில் இருந்த போதும் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது. எனவே ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதுதான். எந்த மர்மங்களும் இல்லை என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்