அண்ணா, திராவிடம் புறக்கணிப்பா? நாஞ்சிலார் குற்றச்சாட்டுக்கு தினகரன் பதில்

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (13:44 IST)
ஒரு கட்சியின் பெயர் சரியில்லை என்று அந்த கட்சியில் இருந்து விலகும் ஒரே நபர் உலகிலேயே நாஞ்சில் சம்பத் ஆகத்தான் இருப்பார் என்று நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத்தின் குற்றச்சாட்டுக்கு 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தினகரன் விளக்கமளித்துள்ளார். திராவிடம் மற்றும் அண்ணாவை தாங்கள் புறக்கணிக்கவில்லை என்றும் பெயர் காரணத்தால் நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ள தினகரன் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசி உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர்களின் மொத்த உருவம் தான் அம்மா, அவரது பெயரில் கட்சி தொடங்கியுள்ளதால் ஒட்டுமொத்த திராவிடமும் கட்சியில் உள்ளது என்பதுதான் அர்த்தம். இதை புரிந்து கொள்ளமல் அவர் விலகியது வருத்தமளிக்கின்றது.

மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்பது இடைக்கால ஏற்பாடுதான் என்றும், கருப்பு சிவப்பு நிறம் திமுகவிலும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் நாஞ்சில் சம்பத் விலகியதால் தங்கள் அமைப்புக்கு எந்தவித பாதிப்பும் இழப்பும் இல்லை' என்றும் தினகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்