சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் அமமுக-வை சீண்டுவது உயர் அழுத்த மின்சாரத்தை சீண்டுவது போன்றது எனக் கூறியிருந்தார். இவரது கருத்திற்கு எதிர் கர்த்து பதிவிட்ட ஜெயக்குமார் ‘ அதிமுக சீராக இயங்கும் 230 வோல்ட், டிடிவி யாருக்கும் பயன்படாத ஹை வோல்ட். மேலும் தினகரன் தானே அவர் பயங்கரமானவர் என்பதை ஒத்துக் கொண்டுள்ளார் என கூறினார்.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், மின்சாரத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஜெயகுமார் என்னைப் பயங்கரமானவர் என கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஜெயகுமாருக்கு மண்டைக்கு மேல் ஒன்றும் இல்லாததைப் போல மண்டைக்கு உள்ளேயும் ஒன்றும் இல்லை போலும். அதனால் தான் இப்படி பினாத்திக் கொண்டிருக்கிறார் என கூறினார்.