நம்ம சுந்தர் பிச்சை ஓட்டு போட்டாரா ? இல்லையா ? ’செம வைரல் போட்டோ’

வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (09:08 IST)
தமிழகத்தில் நேற்று வேலூர் தவிர அனைத்து மக்களவை தொகுதிகளிலும், சட்டசபை இடைத்தேர்தல்  தொகுதிகளிலும்  தேர்தல் சிறப்பாக நடைபெற்றன. மக்கள் அனைவரும் தங்கள் கடமையை ஆற்ற பொறுப்புணர்வுடன் வாக்களித்தனர்.
ஓட்டு பதிவு நாளானா நேற்று காலை முதல் மாலை வரை அனைத்து ஓட்டுச்சாவடிகளும் பரபரப்பாக இயங்கின. 
 
நேற்று இந்தியாவில் நடந்த இரண்டாம் கட்ட லோக் சபா தேர்தலில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஓட்டளிப்பது போன்ற சமூக வலைதளங்களில் செய்தி தீயாக பரவியது. அவர் ஓட்டளிப்பது போன்ற போட்டோவும் கூட செம வைரலானது.
 
இதனையடுத்து அந்த போட்டோ கடந்த 2017 ஆம் ஆண்டு காரக்பூர் ஐஐடியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சுந்தர் பிச்சை எடுத்துக் கொண்டதுதான் என்றும் அப்போது 3000 மாணவர்களுடன் சுந்தர் பிச்சை கலந்துரையாடியது போது எடுத்துக் கொண்டது என  தகவல் வெளியானது.
 
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டத்தில் பிறந்தவர் சுந்தர் பிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான சுந்தர் பிச்சையால் தற்போதைய விதிமுறைகளின் படி  இந்தியாவில் ஓட்டுபோட முடியாது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்