வேங்கைவயல் சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததா? வடநாட்டில் நடந்ததா? - நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

Prasanth Karthick

வெள்ளி, 2 மே 2025 (17:59 IST)

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.

 

நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடர்ந்து தள்ளிப் போன நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதை திமுகவின் வெற்றி என திமுகவினர் கூறி வருவதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் “வேங்கைவயல் போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில்தான் நடந்துள்ளது. நாங்கள் (வடமாநிலங்கள்) நன்றாக முன்னேறி வருகிறோம். வடக்கில் சில மாநிலங்கள் முன்னேறவில்லை என சொல்கிறார்கள். ஆனால் அந்த மாநிலங்களில் கூட வேங்கைவயல் போன்ற கொடுமைகள் நடக்கவில்லை. 

 

சாதியவாரி கணக்கெடுப்பு குறித்து ஏற்கனவே நாங்கள் விவாதித்து வந்திருக்கிறோம். ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு திமுகவின் வெற்றி என்று கூறிக் கொள்வது அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்