மு.க. ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவருக்கு போன் போட்டு மிரட்டினாரா?: உண்மையை சொல்லுங்கள்!

Webdunia
திங்கள், 24 அக்டோபர் 2016 (12:49 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்த உண்மை நிலவரத்தை சொல்ல வேண்டும் என அப்பல்லோ முதன்மை மருத்துவருக்கு மு.க. ஸ்டாலின் போன் போட்டு மிரட்டியதாக செய்திகள் வருகின்றன.


 
 
சில இணையதளங்களிலும், சமூக ஊடகங்களிலும் இந்த செய்தி வெளியாகி உள்ளது. அதில் மு.க.ஸ்டாலின் என்று குறிப்பிடாமல் வாரிசு தலைவர் என குறிப்பிட்டுள்ளனர். அந்த செய்தியில், முன்னணி ஆங்கில ஊடக குடும்பத்தினர் தெரிவித்த சில கருத்துகள் ஜெயலலிதா நலமுடன் தேறிவருவதை உறுதி செய்தன.
 
ஆனால் அப்பல்லோ வந்து செல்லும் தலைவர்கள் அனைவருக்கும் அதிமுகவினர் தான் விளக்கம் தருகின்றனர். அந்த முன்னணி ஆங்கில ஊடகத்தைச் சேர்ந்த ஒருவர் முக்கிய அரசியல் கட்சியின் வாரிசு தலைவரை அண்மையில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஜெயலலிதா உடல்நிலை குறித்து சில விவரங்களையும் அவர் அந்த வாரிசு தலைவரிடம் கூறியுள்ளார்.
 
இந்நிலையில் அந்த ஊடகவியலாளர் முன்னிலையிலேயே அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டிக்கு போன் போட்ட அந்த வாரிசு தலைவர். உங்க பெர்சனல் நம்பருக்கு எத்தனை முறை அழைப்பது? நான் என்ன பொறுப்பில் இருக்கிறேன் தெரியும்தானே, எனக்கு உண்மையான நிலவரத்தை சொல்லித்தான் ஆக வேண்டும் என கண்டிப்பான குரலில் பேசினாராம்.
 
இதில் அலறிப்போன பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து சில உண்மை தகவல்களை சொல்லியதாகவும் மேலும் தனது மருத்துவமனையின் வருமான இழப்பையும் கூறியதாக கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்