நான் விளையாட மாட்டேன்னு சொன்னேனா.. வதந்திகளை பரப்பாதீங்க! - முகமது ஷமி ஆவேசம்!

Prasanth Karthick

வியாழன், 3 அக்டோபர் 2024 (13:26 IST)

காயம் காரணமாக பார்டர் - கவாஸ்கர் ட்ராஃபியில் ஷமி விளையாட மாட்டார் என பரவி வரும் தகவல் குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

 

 

இந்திய கிரிக்கெட் அணியில் மிக முக்கியமான பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது ஷமி. முன்னதாக நடந்த உலகக்கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விக்கெட்டுகளை அடித்து வீழ்த்திய ஷமியின் ஆட்டம் மிகவும் கொண்டாடப்பட்டது. அதன்பின்னர் காயம் காரணமாக முகமது ஷமி சமீபமாக டெஸ்ட் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடாமல் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை போட்டிகளில் ஷமி இடம்பெறுவாரா என்ற கேள்வி இருந்தது. சமீபமாக ஷமி இந்த போட்டியில் பங்கேற்கமாட்டார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
 

ALSO READ: வேட்டையன் படத்துக்குத் தடைவிதிக்க நீதிமன்றம் மறுப்பு… வழக்கு ஒத்திவைப்பு!
 

இந்த தகவலை முகமது ஷமி மறுத்துள்ளதுடன், பொய் செய்திகளை பரப்புவர்களை கண்டித்தும் உள்ளார். “ஆதாரமற்ற செய்திகளை ஏன் பரப்புகிறீர்கள்? என்னால் முடிந்த அளவிற்கு காயத்தில் இருந்து மீண்டு வர கடினமாக உழைக்கிறேன். பார்டர் - கவாஸ்கர் கோப்பையில் விளையாட மாட்டேன் என்றும் நானும் சொல்லவில்லை. பிசிசிஐயும் சொல்லவில்லை. இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை நம்ப வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்