மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது. சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டது குறித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பில்லை என்றே கூறலாம். சமூக வலைதளங்களிலும் கடுமையான பதிவுக்ளை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.