மீண்டும் தர்மயுத்தம் செய்கிறாரா ஓபிஎஸ்? பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (07:43 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் முதல்வர் பதவியை ஏற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் திடீரென சசிகலாவின் அழுத்தம் காரணமாக பதவியை ராஜினாமா செய்து விட்டு அதன் பின் திடீரென ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து தர்மயுத்தம் செய்தார். அவருடைய தர்மயுத்தம் காரணமாகவே சசிகலா முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது
 
அதன் பின்னர் சசிகலா சிறைக்கு சென்றபின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுடன் இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொண்ட ஒபிஎஸ் துணை முதல்வர் பதவியை ஏற்று அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார் 
 
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த பிரச்சனை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே இருந்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் இந்த விவகாரம் உச்ச கட்டத்தை அடைந்தது
 
இதனை அடுத்து அக்டோபர் 7 ஆம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அனேகமாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ் மீது துணை முதல்வர் ஓபிஎஸ் அதிருப்தியில் இருப்பதாகவும் துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ஜெயலலிதா சமாதியில் தர்ம யுத்தம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது 
 
ஓபிஎஸ் அவர்களுக்கு பாஜகவின் ஆதரவு பின்னணியில் இருப்பதால் அவர் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கூறப்படுவதால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்